அதிர்ச்சி!.. ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா.. சென்னையில் கிடுகிடு உயர்வுக்கு காரணம் என்ன?
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் மாலை நேரங்களில் கொரோனா தொற்று குறித்த எண்ணிக்கையை மீடியா புல்லட்டினில் அரசு கொடுத்து வருகிறது. அதன்படி இன்று வெளியான நிலவரத்தில் சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது. இது பெரும் கவலையை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண் குழந்தைகள்
தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் குழந்தைகள் 83 பேரும் பெண் குழந்தைகள் 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 13 முதல் 60-வயதுக்குட்பட்டவர்கள் வரை 1554 ஆண்களும், 763 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89 பெண்களும், 191 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரச்சினை
எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வடசென்னையில் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி
ஞாயிற்றுக்கிழமை அன்று மீன் சந்தை, வீட்டு விலங்குகள் விற்பனை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகளில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டமாக கூடுவது பெரும் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வீடுகளும் சிறிது சிறிதாக இருக்கிறது. இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர்.

சென்னை
மேலும் தற்போது தொழில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் வடசென்னையில் வீடுகளில் சீட்டாடும் பழக்கம் இருப்பதாக தகவல்கள் உள்ளன. எனவே வீடுகள் நெருக்கமாக இருப்பதும் கொரோனா பரவலுக்கு ஒரு காரணமாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்பது இனிதான் மாநகராட்சி வெளியிடும்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications