பாமகவின் மதுவிலக்கு பிரசாரத்திற்கு ஏன் அனுமதி மறுப்பு! ஆளுங்கட்சிக்காகவா காவல்துறை? நீதிபதி சரமாரி
சென்னை: தமிழக காவல் துறை ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் அனுமதி வழங்குவார்களா என்றும் அது யாருடைய ஏஜென்சி என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக தொடர்ந்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு, இலவச தரமான கல்வி, இலவச தரமான மருத்துவம் ஆகியவை வழங்கப்படும் என்கிறார்கள்.

இலவச கல்வியும் மருத்துவமும் மற்ற ஆட்சிகளிலும் இருந்தாலும் அதில் பாகுபாடுகள் இருப்பதாக பாமக குற்றம்சாட்டுகிறது. அனைவருக்கும் சரிசமமான கல்வியும் மருத்துவமும் கிடைத்துவிட்டால் மற்ற பொருள்களை இலவசமாக வழங்க தேவையில்லை என்பதுதான் பாமகவின் செயல்திட்டமாக இருக்கிறது.
தமிழகத்தில் போதை, மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறும் பாமக, பாமகவின் கொள்கை குறித்து பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த ராணிப்பேட்டை காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
யாருக்காக காவல் துறையினர் உள்ளனர்? பொது மக்களுக்காகவா? ஆளுங்கட்சியினருக்காகவா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும் போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
ஒரு வேளை யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால் டிஎஸ்பி நேரில் ஆஜராக சொல்லி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் மாதம் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications