கட்டிட விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: கட்டிட விதிமீறல்கள் செய்து சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்டிட விதிமீறல் தொடர்பாக சென்னையை சேர்ந்த சாந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சீல் வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீஸ்க்கு மனுதாரர் அளித்த விளக்கத்தை மாநகராட்சி நிராகரித்தது.

இதை எதிர்த்து அரசுக்கு மறு ஆய்வு மனு அளித்த நிலையில், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு, அரசிடம் அளித்த மறு ஆய்வு மனுவை பரிசீலிக்க உரிய நேரம் வழங்க வேண்டும், அவ்வாறு நேரம் வழங்காமல் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் சென்னை மாநகரம் விதிமீறல் கட்டிடங்களால் கான்கீர்ட் காடாக மாறிவிட்டது என்றும் இதன் காரணமாக நகரம் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகளை சந்திப்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால் அண்டை வீட்டார் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications