திருவண்ணாமலை தேர் வலம் வரும் வீதியில் கான்கிரீட் சாலைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலசேசுவரர் கோவிலின் தேர் வலம் வரக் கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் தேர் வலம் வரும் பெரிய வீதியில் தார் சாலைக்கு பதில் காங்கிரீட் சாலை அமைக்க தடை விதிக்க கோரி திருவண்ணாமலை எடப்பாளத்தை சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சாலையை காங்கிரீட் சாலையாக மாற்றினால் தேர் வலம் வருவதில் சிக்கல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு முன்வந்த போது, 70சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் பணிகள் முழுமையாக முடிந்து விடும் எனவும் பல கோவில்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளதாகவும், தேர்களில் ஹைட்ராலிக் பிரேக் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கான்கிரீட் சாலையில் தேர் வலம் வருவதில் சிக்கல் உள்ளது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications