அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ஏன் வந்தார்?.. வன்முறையை போலீஸ் தடுக்காதது ஏன்?.. நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பையும் காவல் துறையையும் நீதிபதி சதீஷ்குமார் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் தலைமை பதவி யாருக்கு என்பதற்கான அதிகார போட்டி ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி இடையே நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியோ ஒற்றை தலைமை தேவை என்றும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு நடந்தது. இந்த பொதுக் குழுவில் வைத்து எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஓபிஎஸ் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடி அன்றைய தினம் புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற தடை பெற்றார். இதனால் அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏமாற்றமே விஞ்சியது.

பொதுக் குழு
இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு மீண்டும் கூடியது. அந்த பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு பதிவு செய்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவே கிடைத்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் சென்றார்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்
இந்த தகவல் அறிந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒன்று கூடினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பல தொண்டர்கள் காயமடைந்தனர். இதனால் பெரும் வன்முறை அப்பகுதியில் வெடித்தது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

ஒருங்கிணைப்பாளர்
இந்த சீலை அகற்றக் கோரி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்ஸும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video

நீதிபதி சரமாரி கேள்வி
மேலும் நீதிபதி ஓபிஎஸ் தரப்பிற்கும் காவல் துறைக்கும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார். அவர் , ஓபிஎஸ் எதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்? இவ்வளவு பெரிய வன்முறை நடக்கும் போது அருகேயே போலீஸார் இருந்தும் அவர்கள் ஏன் தடுக்கவில்லை என்பன உள்ளிட்ட கேள்விகளை முன் வைத்தார். அதிமுகவில் ஏற்கெனவே உள்கட்சி பிரச்சினை இருக்கும் நிலையில் ஓபிஎஸ் எதற்காக அதிமுக அலுவலகம் வந்தார் என ஏற்கெனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை!











Click it and Unblock the Notifications