புதிய மோட்டார் வாகன சட்டவிதிகளை அமல்படுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்ட ஹைகோர்ட்
சென்னை: புறநகர் மற்றும் மாவட்டங்களில் கட்டாய ஹெல்மட் சட்ட விதிகளை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாரயணன் மற்றும் ஷேஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது,அப்போது மோட்டார் வாகன புதிய சட்ட விதிகளை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் இல்லையென்றால், இந்த வழக்கில் மனுதாரரை நீக்கவிட்டு நீதிமன்றமே தாமாக வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளும் என தெரிவித்தார்.
ஹெல்மட் அணிவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும்,குறிப்பாக மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகளுடைய கடமை என தெரிவித்த நீதிபதிகள் அரசின் நிர்வாக பணிகளை நீதிமன்றங்கள் நடத்த முடியாது என கூறினர்.
கட்டாய ஹெல்மட் சட்டம் என்பது அரசின் சட்டம் எனவும்,அதனை உரிய முறையில் அமல்படுத்தபடுகிறதா என்பதை மட்டுமே நீதிமன்றம் விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை தவிர போக்குவரத்து துறை (transport dept) என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினார்..
சென்னையை தவிர மதுரை போன்ற பெரு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளிலும் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அனைவருக்கு சமுதாய பொறுப்பு உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் கட்டாய ஹெல்மட் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காட்சி ஊடகங்கள் தங்களுடைய பங்களிப்பை செய்யவேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications