Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் குளறுபடி! ரோகிணி தியேட்டர் சேதத்திற்கும் போலீஸாரே காரணம்.. நீதிபதி காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும் லியோ டிரைலரின் போது ரோகிணி திரையரங்கத்தில் சேதம் ஏற்பட்டதற்கும் போலீஸாரின் தவறான கையாளுதலே காரணம் என நீதிபதி ஜெயசந்திரன் காட்டமாக தெரிவித்திருந்தார்.

சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

Chennai HC judge condemns police for not giving proper protection for A.R.Rahman concert

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்ததினம் ஆகிய நிகழ்வுகளையொட்டி வரும் 29 ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த வேண்டும் என கடந்த மாதம் 20ஆம் தேதியே காவல் துறையில் ஆர்எஸ்எஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆனால் அதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என்பதால் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த வாரம் அளித்த மனுவை பரிசீலிக்காமல் வைத்திருந்துவிட்டு கடைசி நேரத்தில் நிராகரிக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் காவல் துறை இது போலவே செய்கிறார்கள் என்றார். அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , பேரணிக்கு அனுமதி கோரும் பாதையில் மசூதிகள், தேவாலயங்கள், பிற அரசியல் அலுவலகங்கள் உள்ளன என்றார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு அதற்காக இந்த பகுதியில் யாரும் நடக்கக் கூடாது என கூறிவிட முடியுமா என கேட்டார்.

ஆர்எஸ்எஸ் அளித்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இது போன்ற நிகழ்ச்சிகளின் போது தடை விதிக்காமல் கட்டுப்பாடுகளை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு விதிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறும் இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் இருந்தால் அங்கு போலீஸார் பாதுகாப்போடு அணிவகுப்பு நடத்தி அனுமதிக்கலாம் என்றார். மேலும் நீதிபதி கூறுகையில் ஏ.ஆர். ரகுமான் இசை வெளியீட்டு விழாவில் நடந்த குளறுபடிக்கும் லியோ டிரைலர் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கத்தில் நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதற்கும் போலீஸாரின் தவறான கையாளுதலே காரணம், ரசிகர்களை போலீஸார் முறையாக கையாண்டிருக்க வேண்டும் என நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆஜராகி விளக்கமளிக்க அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவுக்கு உத்தரவிட்டதை அடுத்து ஜின்னா கூறுகையில் ரோகிணி திரையரங்கின் வெளியே லியோ டிரைலரை வெளியிட அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை. திரையரங்கிற்குள் டிரைலரை வெளியிட காவல் துறையின் அனுமதி பெற தேவையில்லை.

ஏ.ஆர். ரகுமான் இசை வெளியீட்டு விழாவின் போதும் போலி டிக்கெட் மூலம் ரசிகர்கள் உள்ளே நுழைவதை தடுக்க அந்தந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினோம். மேலும் லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தாமாகவே தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது. தற்போது அந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த லியோ பட குழு மனு அளித்தால் அதை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம்.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின் போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்து குளறுபடி ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி போல் அல்லாமல் லியோ ஆடியோ லாஞ்சை கவனமாக நடத்த அறிவுறுத்தினோம் என பதில் அளித்தார். அப்போது நீதிபதி கூறுகையில் இது போன்ற நிகழ்வுகளின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து நீதிமன்றங்கள் கவலை தெரிவிப்பதாகவும் பத்திரிகையில் வரும் செய்திகளை அடிப்படையாக கொண்டு கருத்துகளையும் கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்புகிறது என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+