செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கான விதிமுறைகள்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர், விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் போது, பிராணிகளை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அவற்றை அங்கு சேர்த்துச் செல்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல முறைப்படுத்தப்படாத செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், முறையான தகுதியில்லாத நபர்களை பராமரிப்பாளர்களாக நியமித்துள்ள இந்த மையங்களில், பிராணிகள் உரிய முறையில் பராமரிக்காமல் சில நேரங்களில் அவை இறந்து விடுவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
வர்த்தக நோக்கில் செயல்படும் இதுபோன்ற மையங்களை ஆய்வு செய்த பிறகே ஒப்புதல்கள் வழங்கவேண்டும் எனவும், இதுபோன்ற மையங்களை முறைப்படுத்துவதற்காக, பிரிட்டனில் 2018 ம் ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரிட்டனைப் போல செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மிருக வதை தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் செல்லப் பிராணிகள் பராமரி்பபு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications