ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது மார்ச் 28 வரை எந்த நடவடிக்கையும் கூடாது.. சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் உத்தரவு
இருவர் தற்கொலை வழக்கில் ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு அந்த நிறுவனம் பதில் அளிக்கும் வரை கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட தோல்வியால் இருவர் தற்கொலை தொடர்பான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பதில்மனு தாக்கல் செய்யும் வரை எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சிபிசிஐடி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்துவந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரனும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24*7 என்கிற நிறுவனத்திடம் விளையாட்டு தொடர்பான விவரங்கள், விளையாட்டு மூலம் வழங்கப்பட்ட போனஸ், சம்பாதித்த தொகை , வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை வழங்கும்படி சிபிசிஐடி கடந்த மாதம் 24ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த இரண்டு நோட்டீஸ்களும் ரத்து செய்ய கோரி கேம்ஸ் 24*7 நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், நான்கு வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன என்றும், ஏராளமான ஆவணங்கள் உள்ளதால் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதுவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதையடுத்து அரசு தரப்பு பதிலளிக்க மார்ச் 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications