டிவி ஆங்கருக்கு பாலியல் தொல்லை! காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த
கார்த்திக் முனுசாமி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த நிலையில் கார்த்திக் முனுசாமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் புகாரளித்த பெண் கேரளா வந்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார். காவல்துறை தரப்பிலும், புகார் அளித்த பெண் தரப்பிலும் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்திட உத்தரவிட்டு, கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
பின்னணி என்ன: சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன். அங்கு கோயில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் உள்ளார்.
அவர் என்னுடன் நட்பாக பழகினார். இதனால் நான் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் பேசுவேன். ஒரு நாள் நான் கோயிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அவருடைய காரில் வீட்டில் விடுவதாக சொன்னார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். பிறகு திடீரென அவருடைய வீடும் இந்த வழியில்தான் இருக்கிறது. ஒரு முறை வீட்டுக்கு வந்துவிட்டு செல்லுமாறு தெரிவித்தார்.
நானும் அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு அவர் ஒரு தீர்த்தத்தை கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கினேன். பிறகு சிறிது நேரம் கழித்து நான் கண் விழித்து பார்த்த போது அவர் வீட்டு படுக்கை அறையில் நான் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்போது கார்த்திக்கிடம் கேட்ட போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
அவருடைய மனைவி இருந்த போதும் எனக்கு அவருடைய வீட்டில் தாலி கட்டினார். பிறகு நாங்கள் இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தினோம். இதில் நான் கருவுற்றேன். ஆனால் அவர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார்.
பின்னர் என்னை விஐபி ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் நெருக்கமாக இருக்க சொன்னார். என்னை அவருடைய தோழி மூலம் பாலியல் தொழிலுக்கு தள்ள பார்த்தார். இதற்கு மறுத்த போது கார்த்தி முனுசாமியின் மனைவி, இதையெல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் மனமுடைந்த நான் கோயில் தலைமை குருக்களான காளிதாஸ் என்பவரிடம் போய் முறையிட்டேன்.
அவரோ கார்த்திக்கை திட்டுவது போல் திட்டிவிட்டு, அவரோடு குடும்பம் நடத்தியதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என என்னிடம் கேட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் வாழ்க்கையை சீரழித்த கார்த்திக் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து கார்த்திக் முனுசாமியின் செல்போனில் ஏகப்பட்ட இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்தன. அந்த செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
தலைமறைவாக இருந்த கார்த்திக் முனுசாமியை கொடைக்கானலில் வைத்து கைது செய்தனர். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவில் தானும் அந்த பெண்ணும் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கேட்டிருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications