மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி! சிஎம்ஆர்எல்லுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் மேற்கூரை அமைக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் வாகனம் நிறுத்த வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் வெயில் மழையில் நனைந்து பாழாய்ப் போவதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், போதிய அளவில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததால் வாகனங்கள் திருடு போகும் சம்பவம் நிகழ்வதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜூன் மாதம் அளித்த மனு மீது மெட்ரோ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications