குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளா? தமிழக அரசு ஆணை சொல்வது என்ன?
சென்னை: நீர் நிலைகள் குளம் குட்டை ஏரி போன்ற அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு ஆணை 540 வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுயதொழில் தொடங்குவோம் என்ற எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அரசாணையை பதிவிறக்கம் செய்ய 👇👇👇https://cms.tn.gov.in/sites/default/files/go/rev_e_540_2014.pdf

ஆக்கிரமிப்பினை அகற்ற கோரும் மனுவை வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும் அவர் 60 நாட்கள் கால கொடுவிற்க்குள் ஆக்கிரமிப்பு அகற்றல் பணியை செய்து முடிக்க வேண்டும்
முதலாவது மேல்முறையீடு கோட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். சீராய்வு மனு மாவட்ட வருவாய் அலுவலரிடம் காலகொடு 30 நாட்கள். வட்டாட்சியரிடம் மனு கொடுத்தவுடன் (முடிந்த வரை நேரில் கொடுப்பதை தவிற்க்கவும் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் சிறந்தது) மனுவின் பதிவு எண் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்யவும் 60 நாட்கள் கால கொடுவில் வட்டாட்சியர் திருப்தியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் அல்லது கொடுத்த பதில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக (61-ம் நாளே) மேல்முறையீடு செய்யவும் . கூடுதலாக ஷை மனு தொடர்பான முழு கோப்பு நகல்களையும் (அலுவலக கோப்பு குறிப்புகள் உட்பட) வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து கோரவும்.
வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு மனு கொடுத்தவுடன் (முடிந்த வரை நேரில் கொடுப்பதை தவிற்க்கவும் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் சிறந்தது) மேல்முறையீடு மனுவின் பதிவு எண் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்யவும் 30 நாட்கள் கால கொடுவில் வருவாய் கோட்டாட்சியர் திருப்தியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் அல்லது கொடுத்த பதில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக (31-ம் நாளே) சீராய்வு மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் செய்யவும் கூடுதலாக ஷை மனு தொடர்பான முழு கோப்பு நகல்களையும் (அலுவலக கோப்பு குறிப்புகள் உட்பட) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து கோரவும்.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனுவை கொடுத்தவுடன் (முடிந்த வரை நேரில் கொடுப்பதை தவிர்க்கவும் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் சிறந்தது) சீராய்வு மனுவின் பதிவு எண் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்யவும் 30 நாட்கள் கால கெடுவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருப்தியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் அல்லது கொடுத்த பதில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக (31-ம் நாளே) ஆலோசனை குழு தலைவரான ஆட்சியரிடம் செய்யவும் கூடுதலாக சீராய்வு மனு தொடர்பான முழு கோப்பு நகல்களையும் (அலுவலக கோப்பு குறிப்புகள் உட்பட) மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து கோரவும்.
இதனிடையே முதல்வர் தனி பிரிவு, மாவட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு ( அரசு ஆணை 540 -ஐ குறிப்பிடாமல்) மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை தகவல் அறியும் சட்டத்திலும் கேளுங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications