உயர் நீதிமன்ற உத்தரவால் கிடைத்த உரிமை....போலந்து புறப்பட்டுச் சென்றார் மாற்றுத்திறனாளி வீராங்கனை
சென்னை: போலந்துக்கு விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன் போலந்துச் செல்ல தனது தாயாருடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் முஜீப் சலாமத் தம்பதியின் மகள் சமீஹா பர்வீன். இவர் தனது சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக தனது செவித் திறனை இழந்தார். இவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வத்தை கண்டுபிடித்த அவரது பெற்றோர் பல்வேறு தடகளப் போட்டிகளில் அவருக்கு பயிற்சி அளித்தனர்.
இதையடுத்து தேசிய அளவிலான காது கேளாதோருக்கான தடகள போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்றார். இந்த நிலையில் வரும் 22 ஆம் தேதி போலந்தில் சர்வதேச அளவிலான தடகள போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாணவியை டெல்லிக்கு அழைத்துச் செல்லக் கூட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்வராத நிலையில் திருச்சியைச் சேர்ந்த மற்றொரு மாணவருடன் இவருடைய பெற்றோர் தங்களுடைய ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அனுப்பி வைத்தனர். அந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாட்டு கழகம் நிர்ணயித்த 4.2 மீட்டர் நீளத்தை விட5 மீட்டர் தாண்டி சாதனை புரிந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பார் என மகிழ்ச்சி அடைந்த போது இந்திய விளையாட்டு ஆணையமோ " தனியாக ஒரு பெண்ணை அனுப்ப முடியாது" என காரணம் காட்டி இவரை அந்த போட்டியில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளாமல் புறக்கணித்தது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசை பலமுறை வலியுறுத்தியும் உரிய தீர்வு கிடைக்காததால் இந்த மாணவியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி மகாதேவன், தடகள போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரது சொந்த கிராமமான கடையாலுமூட்டில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிப்பதற்காக சமீஹா பர்வீன் தனது தாயார் சலாமத்துடன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஒருவாரம் டெல்லியில் பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் போலந்து செல்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications