கிறிஸ்துவ திருமணங்கள் பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு
Recommended Video
சென்னை: கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும் படி தமிழக பதிவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புக்களும், பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்துவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்ககோரி பதிவு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேலூரை சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை மறுப்பதாகவும் இது தொடர்பாக பதிவுத் துறைக்கு மனு கொடுத்தும் இந்த மனு மீது எந்த பதிலும் தெரிவிக்காததால் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஷேஷாசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கிறிஸ்தவர்களுக்கு நடத்தபட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனை பதிவு செய்வது இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதிகள் மனுவிற்கு டிசம்பர் 6 தேதிக்கு பதிலளிக்கும் படி,தமிழக பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications