பழங்குடியின ஜாதி சான்றிதழ்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த உமா என்பவர் பழங்குடியின பெண், தனக்கும், தனது 3 குழந்தைகளுக்கும் குருமன்ஸ் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்துடன், தான் குருமன்ஸ் இனத்தை சார்ந்தவர் என்பதற்கான ஆவணமாக அவரின் சகோதரர் மாதவன் நீதிமன்ற உத்தரவின் மூலம் பெற்ற சாதி சான்று நகலையும் இணைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த விண்ணப்பமானது மாவட்ட ஆட்சியரால் கடந்த 2019 ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து 2021 ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியரை அணுகி, சாதி சான்று கோரி மேல் முறையீடு செய்யலாம் என்றும் அதில் 6 மாதத்தில் அவர் முடிவெடுப்பார் என அறிவுறுத்தல்களை வழங்கி வழக்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2022 ஆண்டு சாதி சான்று அளிக்க உத்தரவிடக் கோரி மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தார். அதில் மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிறைவேற்றாமல் இருப்பதால் தனக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி உமா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், குமரேஷ்பாபு அடங்கிய அமர்வானது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வரும் ஆகஸ்ட் 22 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications