கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் இல்லாமலேயே மறு பிரேத பரிசோதனை செய்யலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறு உடற் கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தையின் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறு உடற்கூறு ஆய்வு நடைமுறையை தொடங்கலாம் என்றும், பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் கூறிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது.

மாணவியின் தந்தை மனு

மாணவியின் தந்தை மனு

இந்த நிலையில், மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறு உடற் கூறாய்வு

மறு உடற் கூறாய்வு

மாணவி உடலுக்கு மறு உடற் கூறாய்வு நடத்தும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவரையும் சேர்க்கக் கோரி மாணவியின் தந்தை தரப்பில் முறையிடப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

ஐகோர்ட் மறுப்பு

ஐகோர்ட் மறுப்பு

இதனையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில் திருப்தி என உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதால், மறு உடற்கூறாய்வுக்கு அனுமதி அளித்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென மாணவியின் தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மறு உடற் கூறாய்வு உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

மறு பிரேத பரிசோதனைக்கு தடை இல்லை

மறு பிரேத பரிசோதனைக்கு தடை இல்லை

இந்த நிலையில், மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் மீது நம்பிக்கை இல்லையா என மனுதாரர் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பியதுடன் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் உடற் கூறாய்வுக்கு தடையில்லை என உத்தரவிட்டனர்.

ஐகோர்ட் நீதிபதி

ஐகோர்ட் நீதிபதி

உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறு உடற்கூறு ஆய்வு நடைமுறையை தொடங்கலாம் என நீதிபதி என்.சதீஷ்குமார் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார். பெற்றோர் எங்கு இருகிறார்கள் என தெரியவில்லை என்றும், உடற்கூறாய்வு நிபுணர்கள் வந்துவிட்டார்கள் என்றும், பெற்றோர் தரப்பு இல்லாமல் உடற்கூறு ஆய்வு செய்யலாமா என தெளிவுபடுத்தக் கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்டது.

Recommended Video

    Kallakurichi School Girl மறு பிரேத பரிசோதனை முடிந்தது..அடுத்து என்ன?
    பெற்றோர் வந்தால்

    பெற்றோர் வந்தால்

    மாணவி வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு உடற்கூறாய்வு செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அரசு தரப்பு விளக்கம் அளித்தது. இதையடுத்து, சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறு உடற் கூறாய்வு செய்ய அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து 1 மணியளவில் மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வு நடக்க இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+