நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அனைத்தும் வீடியோ பதிவு.. அதிமுக வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில் தொடங்கி ஒவ்வொரு கட்டமும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாக நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக வழக்கு
அவர் மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக தொடர்ந்த வழக்கில், அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்ற உத்தரவிட்டும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

கேள்விக்குறி
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது தொடர்பாக கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி ஆளுநரிடமும், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாதென நவம்பர் 1-ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளதாகவும், மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும்,வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையை பயன்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையம்
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,
மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில், வேட்புமனு தாக்கல் தொடங்கி ஒவ்வொரு கட்டமும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை, சுதந்திரமாகவும், மற்றும் நியாயமாகவும் நடத்துவது தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை யும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications