புதிய மாவட்டமாக செய்யாறை உருவாக்கக் கோரும் மனு.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்யாறை தலைமையிடமாக கொண்டு வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட்டு, ஆரணி உள்பட 5 தாலுக்காக்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க கோரி, பையூர் தாலுகாவை சேர்ந்த விஜய்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 1989-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. பையூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளிடம் புகார் அளிக்க 100 கிமீ வரை பயணிக்க வேண்டி இருப்பதாகவும், இதுகுறித்து இரண்டு முதல்வர்களிடம் மனு அளித்தாகவும், செய்யாறை மாவட்டமாக அறிவிக்க உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும், அறிவிப்பு வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனு குறித்து ஜனவரி 23ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications