ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது.. தடை தொடரும்.. மேல்முறையீட்டில் அதிரடி தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த 2022ஆம் ஆண்டு மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியின் வசம் என்பது உறுதியானது. தொடர்ந்து, கட்சி பொதுக்கூட்டங்கள், மாநாடு என நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

Chennai hc verdict today on O Panneerselvams appeal against ban on use of aiadmk flag name symbol

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருவதாலும், அதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் தொடர்ந்து கூறிவருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். எனவே, அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்ந்து, 3 முறை ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு, ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்கம் செல்லும் என்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

Chennai hc verdict today on O Panneerselvams appeal against ban on use of aiadmk flag name symbol

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தியதால் வழக்கு தொடரப்பட்டது என வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த மேல் முறையீட்டு வழக்கில் காட்டிய ஆர்வத்தை தனி நீதிபதியிடம் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டி இருந்தால் தடை விதிக்கப்படாமல் இருந்திருக்கும் என வாதிடப்பட்டது.

இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பிற்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+