Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்தம்பித்த சென்னை.. அசத்தும் ஆம்னிகள்.. இன்று மீண்டும் 1600 பஸ்களை இயக்க முடிவு.. ஆம்னி ரூட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் சூழலில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர்.. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறைகள் உள்ளதால், பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகிறார்கள். சென்னையில் இருந்து 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 பேருந்துகள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன...
குறிப்பாக, சென்னையின் 6 இடங்களிலிருந்து பஸ்கள் கிளம்பி செல்கின்றன.. அதாவது, கிளாம்பாக்கம், சென்னை கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, குரும்குளம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னையில் இருந்து நேற்று மட்டும் 3.58 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறார்களாம்..

Chennai Heavy Traffic in Kilambakkam Bus Stand due to Pongal Festival and 1600 Special Omni Bus for Chennai People

ஆம்னி அறிவிப்பு: இதற்காக சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும், 2,100 பஸ்களோடு, 901 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன... அரசு பஸ்களில் மட்டுமே நேற்று ஒரேநாளில் 1.75 லட்சம் பேர் வரை பயணம் செய்திருக்கிறார்கள் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதேபோல, ஆம்னி பஸ்களில், 60,000த்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு, இன்றைய தினம் 1600 பஸ்களை இயக்க போவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது:

சிறப்பு பஸ்கள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு, கடந்த 11ம் தேதி 1,250 பஸ்களும், நேற்று 12ம் தேதி 1,600 பஸ்களும் இயக்கினோம். இன்றைய தினம் 13ம் தேதி 1,600 பஸ்களை இயக்க உள்ளோம்.

இதுவரைக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.. செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ஆம்னி பஸ்கள், கோயம்பேட்டில் புறப்பட்டு வானகரம், பூந்தமல்லி, நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்று, பயணியரை ஏற்றிச்செல்லும்.

ஈசிஆர் ரோடு: வடபழனி, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக, ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது... இருந்தாலும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புதுச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பஸ்கள், காவல் துறை அனுமதியுடன் வழக்கம் போல இயக்கப்படும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+