எப்படி பாதுகாக்காம விட்டீங்க? விற்ற நிலத்தில் நீங்க எப்படி விவசாயம் செய்யலாம்? ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிட்ட விவசாயிகள் தரப்பையும் சாடியுள்ளார் நீதிபதி.
என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியின் போது, பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, அறுவடை வரை விவசாயிகளை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியும், நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தாக்கல் செய்திருந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது இருதரப்பிலும் உத்தரவாத மனுக்கள் தாக்கல் செய்யப்படன. அப்போது என்எல்சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "தற்போது கால்வாய் தோண்டப்படும் நிலம், சுரங்கத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலம் மிக முக்கியமான பகுதி. மழைக்காலத்தில், சுரங்கத்துக்குள் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். அதற்காக பரவனாறை திசை மாற்றி அனுப்புவதற்காக இந்த கால்வாய் தோண்டப்படுகிறது.
இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. சேதப்படுத்தப்பட்டுள்ள பகுதியை, தவிர்த்த கையகப்படுத்தியுள்ள மற்ற பகுதிகளில் பயிர்கள் அறுவடை செய்யும் வரை என்எல்சி தரப்பில் எந்த இடையூறும் கொடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.
நேற்று முன் தினம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளின்போது சேதப்படுத்தப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து தமிழ்நாடு அரசும், என்.எல்.சி தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யும் வரை தொந்தரவு செய்யப் போவதில்லை எனவும், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும், சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், நெற்பயிர் சேதப்படுத்தப்பட்டதால் 88 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 53 பேருக்கான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு தாசில்தாரரிடம் இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் என்.எல்.சி. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, நிலம் கையகப்படுத்தும் போது வழங்குவதாக கூறிய இழப்பீடான ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாயை முழுமையாக வழங்காமல் பயிர்களை சேதம் செய்துள்ளதாகவும், தற்போது சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல எனவும், ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.எல்.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முன்னாள் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்தது அத்துமீறல் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்காமல் இத்தனை ஆண்டுகள் விவசாயம் செய்ய அனுமதித்து என்.எல்.சி. நிர்வாகமும் தவறு செய்து விட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, இரு தரப்பிற்கும் 50-50 பொறுப்பு இருப்பதாகத் தெரிவித்து, சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த தொகையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும், செப்ட்ச்ம்பர் 15ஆம் தேதிக்குப் பின் நிலத்தில் எந்த விவசாய பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்.எல்.சி பாதுகாக்க வேண்டும் என்றும், நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications