உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: ஒவ்வொரு பஞ்சாயத்திலும் வார்டு வாரியாக இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக, வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திடம், மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மதுரை வீரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்காவிட்டால், அந்தப் பெயர்களில் கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, வாதம் வைத்தார்.
பின்னர் உத்தரவிட்ட மனுவுக்கு நவம்பர் 28 ஆம் தேதி பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications