சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும்.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில் அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அறிக்கை தாக்கல்
அப்போது வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வனப்பகுதியில், 1,325 ஹெக்டேர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் அவற்றை அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 281 ஹெக்டேர் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் ஓராண்டு காலத்தில் அகற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி துறை அறிக்கை
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. 45 லட்சம் ரூபாய் செலவு செய்து, மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்த மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட ஏதுவாக மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டு மரங்கள் வளர்க்க..
ஊரக வளர்ச்சித் துறை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடுவது தொடர்பான குழுவை 15 நாட்களில் அமைக்க உத்தரவிட்டனர்.மேலும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் இப்பணியை பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் ஒரு லட்சத்து 19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களில் 2750 ஹெக்டேர் பரப்பில் அமட்டும் அகற்றப்பட்டுள்ளதால், மீதமுள்ள பரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த உத்தரவிட்டனர்.

விசாரணை தள்ளி வைப்பு
அதோடு விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். விசாரணைக்கு பின், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஐந்து இடங்களில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்க உள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் வரும் 10ம் தேதி அமைக்க உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications