அமைச்சர் பொன்முடி வழக்கில் மிக மோசமான விசாரணை.. எப்படி நடந்துச்சு? ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு கருத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 3 கோடியே 8 லட்சம் மதிப்பிலான முரணான சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரமில்லை என்று கூறியும் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

Chennai High court disappointed with Minister ponmudi case

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிந்த நிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், "அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியதில் மிகப்பெரிய தவறு இருக்கிறது. ஜூன் 23ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்கள் கழித்து ஜூன் 28ஆம் தேதி 226 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வெளிவந்த அடுத்த 2 நாட்களில் அந்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டார். நான் எம்.பி எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்பதால் கீழமை நீதிமன்ற ஆவணங்களை பரிசீலித்தேன். 1996-2001 வரையிலும் பொன்முடி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், எம்எல்ஏ-வாகவும் பதவி வகித்துள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த 2002ஆம் ஆண்டு சொத்து குவி்ப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் அவரது நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். 228 சாட்சிகள், 318 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 2006ஆம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு 2015-ல் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு புனையும்போது சரஸ்வதி மற்றும் நந்தகோபால் இறந்து விட்டதால் மற்ற 3 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி 2022 ஏப்.26 அன்று உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மே மாத விடுமுறையில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளார்.

அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை வேலூர் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த 23.01.2023 அன்று அரசு தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 10.04.23 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டு குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடமும் 6.6.2023 அதிவேக விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜூன் 23 முதல் ஜூன் 28 வரையிலான இடைப்பட்ட நாட்களி்ல் 172 சாட்சிகள், 381 ஆவணங்களை பரிசீலித்து 226 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்பிறகு அந்த நீதிபதி 2 நாட்களில் மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார். இந்த வழக்கின் குற்ற நீதி பரிபாலனத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 7.6.22 அன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது சட்டவிரோதமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவேதான் இதுதொடர்பாக தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். இதில் ஏராளமான சட்டப்பூர்வ கேள்விகள் உள்ளது. உயர் நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிபதி விசாரிக்க முடியாது எனக்கூற முடியுமா?

விடுமுறை நாட்களில் விசாரி்க்க அனுமதி கோரியதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அவரை விசாரிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கை விடுமுறை நாட்களில் விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை? மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது எனக் கூறியிருப்பது இதுவே முதல்முறை. 2 நீதிபதிகள் அடங்கிய நிர்வாக கமிட்டிக்கு, ஒரு மாவட்ட வழக்கை, மற்றொரு மாவட்டத்துக்கு மாற்ற அதிகாரம் உள்ளதா?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 407 ன்படியே ஒரு வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமேயன்றி, நிர்வாக உத்தரவின் அடிப்படையில் மாற்ற முடியாது. நிர்வாக நீதிபதிகள் அரசியல் சாசன பிரிவு 227-ஐ பயன்படுத்தி இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளனர். அந்த அதிகாரத்தை முழு அமர்வு மட்டுமே பயன்படுத்த முடியும். வேலூர் மாவட்டத்துக்கு இந்த வழக்கை மாற்றியதற்கு எந்தவொரு காரணமும் தெரிவிக்கவில்லை.

அதற்கு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாக நீதிபதிகளின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தது சட்டவிரோதமா? நீதி பரிபாலனத்தில் நிர்வாக ரீதியாக முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் தலைமை நீதிபதிக்கே உள்ளது. குற்றவியல் வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கே அதிகாரம் கிடையாது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க அனைத்து அதிகாரமும் எனக்கு உள்ளது. ஒரு மன்னர் தனது அதிகாரத்தை தானே தவறாக பயன்படுத்தினார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து விடக்கூடாது. எனவே இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் பதிலளி்க்க வேண்டும். இந்த உத்தரவை தலைமை நீதிபதிக்கு தகவலுக்காக தெரிவிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+