"ரூ.13 கோடி வரி பாக்கி!" ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் ரூ.13 கோடி ரூபாய் வரியை அவரது சட்டப்பூர்வ வாரிசு செலுத்த வேண்டும் என ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது தொடர்பான வழக்கில் வருமான வரி வசூல் நடவடிக்கையை இரண்டு வாரங்கள் நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமான வரி வழக்கு நடந்து வந்தது. அந்த வருமான வரி வழக்கில் ஜெயலலிதா தரப்பு 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு எதிராக ஜெ தீபா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் மற்றொரு சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக்கும் இணைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில் வருமான வரித் துறை சரியான தொகையைக் குறிப்பிடவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அதாவது முதலில் வருமான வரிப் பாக்கி 36 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும் பிறகு 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.. மேலும், சரியான தொகையைத் தெரிவித்தால், வரி நிலுவையைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது..
இதைக் குறித்துக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, வரிப் பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதி சி.சரவணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீபா தரப்பு வழக்கறிஞர், "வருமான வரிப் பாக்கி குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், வருமான வரித்துறை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை" என்றார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட வருமான வரித்துறை, அதுவரை வருமான வரிப் பாக்கி வசூல் நடவடிக்கை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications