டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சென்னை: சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூலிப்படையினர் மருத்துவர் சுப்பையாவை வெட்டி படுகொலை செய்தனர்.
மருத்துவர் சுப்பையாவின் தலை, கழுத்து, கை என்று 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மருத்துவர் கொலை
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டனர். அப்போது இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

காட்டி கொடுத்த சிசிடிவி
நிலத்தகராறில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கினார்கள்.
இந்த கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார்.

நேரடி விசாரணை
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் கொரோனா காலத்திலும் இந்த வழக்கின் நேரடி விசாரணையாக தினமும் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்தது.

குற்றவாளிகள் 9 பேர்
இந்த வழக்கை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதாவது அப்ரூவர் ஆகி விட்ட ஐயப்பனை தவிர பொன்னுசாமி, மேரி புஷ்பம் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

7 பேருக்கு தூக்கு தண்டனை
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார். குற்றவாளிகளான பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ், சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லபிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications