1 வயதில் 1ஆம் வகுப்பு படிச்சீங்களா? அரசு பஸ் டிரைவருக்கு 50 ரூபாய் அபராதம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை: பொய்யான தகவல்களுடன் வழக்கு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுநருக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது பள்ளிச் சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் தனது பிறந்த நாளை 1969 எனக் குறிப்பிடுவதற்கு பதில், 1964 எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், சமீபத்தில் தான் அதை கவனித்ததாகவும், அதனை திருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.

இந்நிலையில், சீனிவாசன் கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரரின் மனுவில் கூறியுள்ள ஆதாரங்களைப் பார்க்கும் போது, ஒரு வயதில் முதல் வகுப்பில் சேர்ந்தது போலவும், 13 வயதில் 1982 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பை முடித்துள்ளதாகவும் சொல்கிறார்.
மனுதாரர் கூறியுள்ளது முற்றிலும் பொய்யானது எனத் தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி, முழுக்க முழுக்க பொய்யான தகவலை அவர் தெரிவித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனுதாரரான ஓட்டுநர் சீனிவாசனுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை இரண்டு வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications