Sridhar Vembu Divorce Case: மனைவி அடுக்கடுக்காக புகார்.. ஜோஹோ ஶ்ரீதர் வேம்புக்கு பறந்த நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஜோஹோ நிறுவனத்தின் இணை இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு, அவரது மனைவி பிரமிளா விவாகரத்து வழக்கு(Sridhar Vembu Divorce Case) கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அவரின் உறவினர்கள், பணியாளர்களை சாட்சிகளாக விசாரிக்க ஆணையரை நியமிக்க பிரமிளா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கில் ஶ்ரீதர் வேம்பு உரிய பதில் அளிக்க சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஹோ நிறுவனத்தின் இணை இயக்குநர் ஶ்ரீதர் வேம்புவுக்கும், பிரமிளா சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுமார் 30 வருடங்களில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஶ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பினார். இதனிடையே தன்னையும், தன் மகனையும் ஶ்ரீதர் வேம்பு விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா விவாகரத்து கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு
கலிபோர்னியாலில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. ஶ்ரீதர் வேம்பு இந்தியாவில் இருப்பதால், இந்த வழக்கில் தனக்கு உதவ ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க பிரமிளா கோரிக்கை வைத்திருந்தார்.
அவர்கள் மூலம் ஶ்ரீதர் வேம்புவின் உறவினர்கள், ஜோஹோ கார்ப்பரேட் நிறுவனத்தின் முக்கிய பணியாளர்களை முக்கிய சாட்சியங்களாக வாக்குமூலங்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை
சாட்சியங்களை வீடியோ கான்பிரன்ஸ் அல்லது நேரடியாக பதிவு செய்து அனுப்பலாம் என்று பிரமிளா தன் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. தனபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஶ்ரீதர் வேம்பு உரிய விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரமிளா புகார்
முன்னதாக ஸ்ரீதர்வேம்புவின் மனைவியான பிரமிளா கலிபோர்னியா நீதிமன்றத்தில், தன்னையும், தங்கள் ஆட்டிசம் பாதித்த மகனையும் ஶ்ரீதர் வேம்பு கைவிட்டுவிட்டார். தங்களுக்குத் தெரியாமலேயே தன் சகோதரி மற்றும் அவரின் கணவர் பெயரில் சொத்துகளை மாற்றிவிட்டார்.
விதிகள்படி வாழ்க்கை துணையின் ஒப்புதல் இல்லாமல் சொத்துகளை மாற்ற முடியாது என கூறியிருந்தார். அப்போது நீதிமன்றம் ஶ்ரீதர் வேம்பு 1.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15,278 கோடி) பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதர் வேம்பு பின்னணி
முன்னதாக, ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு பிரமிளா சீனிவாசனை கடந்த 1993ம் ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது.
கடந்த 2019 இல் ஸ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பினார். 2021ல் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக தான் தற்போது பிரமிளா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications