Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் தரப்பை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய நீதிபதி.. ‘கீழ்த்தரமான செயல்’ - கோரிக்கை நிராகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் மனு அளித்ததற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிபதியை மாற்ற கோரிக்கை விடுத்தது கீழ்த்தரமான செயல், நீதிதுறையை களங்கப்படுத்தும் முயற்சி என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியதாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நாளை பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்திருப்பதால் அதனை மீற முடியாது, சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என கடந்த ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் முறையீடு

ஓபிஎஸ் முறையீடு

இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு செய்தார். அவரது மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார் பன்னீர்செல்வம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.

நீதிபதியை மாற்ற மனு

நீதிபதியை மாற்ற மனு

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும் வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என முறையீடு செய்தார்.

 தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி

இந்த மனுக்களை பார்வையிட்ட தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, வழக்கை ஒரு நீதிபதியிடம் இருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இருவரின் கடிதங்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் ஆலோசித்து, அவரது கருத்தையும் அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

கிருஷ்ணன் ராமசாமி கண்டனம்

கிருஷ்ணன் ராமசாமி கண்டனம்

இந்நிலையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதியை மாற்றக் கோரியது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

என்னிடமே முறையிட்டிருக்கலாம்

என்னிடமே முறையிட்டிருக்கலாம்

ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் தரப்பின் செயல்பாடு உள்ளதாகவும், தீர்ப்பு எதுவாகினும் தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்யலாம், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் எனவும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பழனி’சாமி’யை தரிசித்த பழனிசாமி! என்ன காரணமாம்?
    ஓபிஎஸ் தரப்பு விளக்கம்

    ஓபிஎஸ் தரப்பு விளக்கம்

    ஓ.பன்னீர்செல்வம் பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியதாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், அதனை ஏற்காத நீதிபதி, அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+