என்ன நடக்கும்? பஸ் ஸ்டிரைக் போராட்டத்திற்கு எதிரான வழக்கு.. ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணை
சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

கடந்த டிச. மாதமே இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன் பிறகு இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.. அதை நடத்தவில்லை.. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், என மொத்தம் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 20+ தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. நேற்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த தகவல் வெளிவந்தது முதலே படிப்படியாகத் தமிழ்நாட்டில் பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் பல இடங்களில் பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். காலை சென்னை உட்பட பல இடங்களில் கிட்டத்தட்ட வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், முதல் நாளில் எந்தவொரு பாதிப்பும் தெரியாது என்றும் மதியத்திற்கு மேல் பேருந்துகள் இயக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையிலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு என்பது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications