நீதிபதிகள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: நீதிபதிகள் குறித்து துக்ளக் பத்திரிகை விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மூத்த வழக்கறிஞர் துரைசாமி அனுமதி கோரினார். இந்த வழக்கில், ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று 'துக்ளக்' பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய 'துக்ளக்' ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முந்தைய உத்தரவை ரத்து செய்து, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திரும்பப் பெற்றார். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எஸ்.குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.சேஷசாயி, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில், தற்போதைய அரசின் தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து துரைசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications