கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை.. மாணவிகளுக்கு கருணைத்தொகை! பள்ளியிடம் வசூல் செய்து வழங்க ஐகோர்ட் ஆணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணகிரியில் என்.சி.சி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரியில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 23 பேருக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் பல மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

krishnagiri sivaraman high court

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் மற்றும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

மேலும், இன்னும் எவ்வளவு நாட்களுக்கு காவல்துறை இந்த வழக்கை விசாரணை செய்யும் என தெரியவில்லை. ஆமை வேகத்தில் விசாரணை நடைபெறுகிறது. என்.சி.சி ஆசிரியர் மற்றும் சிவராமனுக்கு இடையே என்ன தொடர்பு? சிவராமனால் ஆசிரியருக்கு என்ன லாபம்? எந்த அடிப்படையில் என்.சி.சி முகாம் நடத்த தனியார் பள்ளியில் அனுமதி வழங்கப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 23 பேரில் இருவருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்ற 21 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணைத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+