நியோமேக்ஸ் வழக்கு: தொடர்ந்து குவியும் புகார்கள்.. அசையும் சொத்துகளை ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அசையும் சொத்துகளை வரும் 31 ஆம் தேதி பொது ஏலம் மூலம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தங்கம், வெள்ளி நகைகளை ஏலம் விட எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் நிறுவனம் தரப்பு தெரிவித்தது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர்.

நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களைச் சேர்த்தனர். பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் ஆர்.முனியப்பராஜ், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே 24,000 புகார்கள் பெறப்பட்ட நிலையில், மேலும் புதிதாக 32,000 புகார்கள் பெறப்பட்டதாக கூறினார். இந்த புகார்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புகார் அளிக்க இன்றைய தினமே கடைசி நாள் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நியோமேக்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, நிறுவனத்திற்கு சொந்தமான தங்க மற்றும் வெள்ளி நகைகள், கார், ட்ரக் உள்ளிட்டவைகளை ஏலம் விடுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறினார். இதனையடுத்து, கார், ட்ரக் உள்ளிட்ட அசையும் சொத்துகளை பொது ஏலம் விடுவது தொடர்பாக வரும் 17 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட்டு 31 ஆம் தேதி ஏலத்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏலம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ஏலம் கோரும் தொகை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஏலம் தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications