சொத்து பத்திரம் போலி என்றால் மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் தமிழக அரசாணை ரத்து! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சொத்துப் பத்திரங்கள் குறித்த புகார்கள் வந்தால் அதனை தமிழக மாவட்ட பதிவாளரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் கொண்டு வந்த 77ஏ, 77பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என அறிவித்து அந்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பை வழங்கினர்.
தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் பிரிவு 77 ஏ, பிரிவு 77 பி ஆகிய 2 உட்பிரிவுகளை கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சேர்த்தது. அதன்படி போலியான அல்லது தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால் அவர் விசாரித்து குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் அந்த பத்திரங்களை செல்லாது என அறிவித்து உத்தரவு பிறப்பிக்கலாம்.

இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக் கோரி நித்யா பழனிசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.சுந்தர், என். செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலஸ் பத்திரப்பதிவு சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட உட்பிரிவுகள் இரண்டும் சட்டவிரோதமானது.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல். இது போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள்தான் இரு தரப்பிலும் விரிவான விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்து ஒரு பத்திரம் போலியானதா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.
இந்த அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது. மாவட்ட பதிவாளர் நீதிமன்றத்தை போல செயல்பட முடியாது. இதனால் சொத்துகள் மீது கடன் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என மனுதாரர் அந்த வாதத்தில் முன் வைத்திருந்தார். இதற்கு அரசு தரப்பு எதிர்வாதத்தை வைத்தது.
கடைசியாக இரு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் கொண்டு வந்த 77ஏ, 77பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என அறிவித்து அந்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பை வழங்கினர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications