பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரிய முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனு! ஹைகோர்ட் நிராகரிப்பு
சென்னை: பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவின் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சமசர தீர்வு மையத்திற்கு அனுப்பலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு ராஜேஷ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பீலா வெங்கடேசன் (ராஜேஷ் தாஸை பிரிந்து வாழும் மனைவி) சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பீலா வெங்கடேசன் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் P.வில்சன், வீட்டின் மீது ராஜேஷ் தாஸுக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுக்க முடியாது என தெரிவித்தார்.
ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், வீட்டுக்கடனை தாம் செலுத்தி வருவதாகவும், தனது உடல் நலனையும் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ராஜேஷ் தாசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications