சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீடிக்கும் கன மழை.. சென்னை சாலைகளில் வெள்ளக்காடு... வெளியில் வராமல் தவிர்ப்பது நல்லது!

சென்னையில் தொடர் மழை காரணமாக சாலையில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தொடர் மழை காரணமாக சாலையில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முதல் நாள் அங்கு தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிலும் இன்னும் காலையில் இருந்து கடந்த 4 மணி நேரமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து! சென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து!

என்ன வெள்ளம்

என்ன வெள்ளம்

இந்த மழை காரணமாக ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, தரமணி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை,, பெரும்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா சாலை, மெரீனாவை அடுத்து உள்ள பகுதிகள், அடையார் பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சாலை முழுக்க தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மரம் விழுந்தது

மரம் விழுந்தது

இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மரம் அதிக அளவில் விழுந்துள்ளது. அடையார் பகுதியிலும், அண்ணாசாலை பகுதியிலும் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளது. இன்னும் சில மரங்கள் விழும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. முக்கிய சாலைகளை மரம் அடைதுள்ளது.

எங்கு விழுந்தது

எங்கு விழுந்தது

அதீத வெள்ளம் மற்றும் மரங்கள் விழுந்ததன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அதிக அளவில் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாகி உள்ளது. இந்த சேதங்களை சரி செய்ய நாளை வரை ஆகலாம்.

சேதங்கள்

சேதங்கள்

இந்த சேதங்கள் காரணமாக மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வெளியில் சூழ்நிலை சரியில்லை. அதனால் மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

English summary
Chennai hits hard due to heavy rain: People advised to stay put inside the home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X