சென்னை ராயபுரத்தில் காலையிலேயே வந்த அதிகாரிகள்.. 40 வீடுகள் அதிரடியாக இடித்து அகற்றம்
சென்னை: சென்னையில் பொதுவாகவே ஆக்கிரமிப்புகளை அரசு அனுமதிப்பது இல்லை.. இதுவரை பட்டா வாங்காத நிலங்களாக இருந்தால் அல்லது வீடுகளாக இருந்தால், கிடைப்பது மிகவும் கடினம். என்றாவது ஒரு நாள் சிக்கல் வரும். ஏனெனில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்தவர்ளுக்கு அடுக்குமாடியில் குடியிருப்புகளைதரும் அரசு, அவர்களை வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளத்தில் 40 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இடித்து அகற்றியிருக்கிறார்கள்..
சென்னையில் ஆக்கிரமித்து குடியிருப்போர் கண்டிப்பாக மாற்று இடங்களை நாட வேண்டும். அல்லது பட்டா வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பட்டா இல்லாமல் பல வருடம் அரசு நிலத்தில் குடியிருப்போருக்கு பின்னாளில் சிக்கல் வரலாம். அரசு நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பாதை ஆக்கிரமிப்பு, சாலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் எந்த கருணையும் காட்டுவது இல்லை.. எத்தனை வருடம் ஆனாலும் இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுகிறது.

வீடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு
நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், ஆக்கிரமிப்புகள் விவகாரத்தில் அவர்களுக்கு எந்த சாதகமான உத்தரவும் கிடைக்கப்போவது இல்லை.. ஏனெனில் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளத்தில் 40 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இடித்து அகற்றியிருக்கிறார்கள்..
ராயபுரத்தில் 150 வீடுகள்
சென்னை ராயபுரம் 53-வது வார்டுக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பேசின் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. இந்த இடத்தை 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வந்தார்கள். மாநகராட்சி அதிகாரிகள் 150 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வழங்கி காலி செய்ய வைத்தது. மீதமுள்ள 40 குடும்பத்தினர் அங்கேயே வசித்து வந்தனர். அவர்களை காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில் தங்களுக்கு இந்த இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்தார்கள்.
சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 40 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றார்கள். வீடுகளை இடிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புக்காரர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து மின் இணைப்பைத் துண்டித்து வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
சாலை மறியல்
அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் 40 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் மூலக்கொத்தளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications