நர்ஸ் உடை மாற்றியதைப் பார்த்து சபலமடைந்தேன்.. கைதான மருத்துவமனை ஊழியர் பரபர வாக்குமூலம்
சென்னை: உடைகள் மாற்றும் அறையில் எத்தேச்சையாக சென்ற போது ஒரு செவிலியர் உடை மாற்றுவதை கண்டதிலிருந்து தனக்கு சபல புத்தி ஏற்பட்டதாக சென்னை தனியார் மருத்துவமனையில் கழிவறையில் கேமரா வைத்து கைதான பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள சிறுநீரக கற்களை நீக்கும் மருத்துவமனை. இங்கு ஏராளமான செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு உடை மாற்றும் அறைக்கு சென்ற ஒரு செவிலியருக்கு ஏதோ கேமரா இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
உடனே தன்னிடம் இருந்த செல்போனில் கேமராவை கண்டறியும் செயலியை எடுத்து பார்த்துள்ளார். அப்போது கேமரா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது புகாரின் பேரில் மருத்துவமனையில் பணியாற்றும் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

உடைமாற்றும் அறை
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் துப்புரவு பணியை சேர்ந்த ஊழியர் என்பதால் எல்லா அறைகளுக்கும் சென்று வருவதற்கு அனுமதி உண்டு. அது போல் ஒரு நாள் நர்ஸ்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றேன்.

நர்ஸ்
அப்போது ஒரு நர்ஸ் உடைமாற்றிக் கொண்டிருந்தார். அதை பார்த்த எனக்கு சபலம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த நாள் அதே நேரம் சென்று மீண்டும் பார்த்தேன். அப்போது வேறு ஒரு நர்ஸ் உடைமாற்றிக் கொண்டிருந்தார்.

இரவு நேரங்களில்
இதனால் அப்படியே வீடியோவாக செல்போனில் எடுத்தேன். இதை வைத்து அந்த நர்ஸிடம் மிரட்டினேன். அவர் உடனே அவரது கணவரிடம் கூறினார். அவர் வந்து என்னை மிரட்டி அந்த வீடியோவை அழிக்க வைத்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் உடை மாற்றும் அறைக்கு சென்ற நான் இரவு நேரங்களில் எனது செல்போனை வைத்து விட்டு வந்து விடுவேன். பின்னர் பகல் நேரத்தில் அதை எடுத்து பார்ப்பேன் என்றார்.

எந்த ஒரு பெண்ணுக்கு
இதையடுத்து பிரகாஷின் செல்போனில் உள்ள வீடியோக்களை அழிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் எந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்பட கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications