தமிழக அரசுக்கு வந்த முக்கிய டாக்குமெண்ட்! சென்னை- ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டத்தில் மேஜர் மாற்றம்
சென்னை: தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை- ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் வகையில் புதிய புல்லட் ரயில் திட்டம் கிட்டத்தட்ட இறுதியாகவுள்ளது. இது தொடர்பாக டிபிஆர் எனப்படும் இறுதி வழித்தட அறிக்கையைத் தமிழக அரசிடம் தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ளது. இந்த ரூட்டில் புல்லட் ரயில் அமைக்கப்பட்டால் 2 மணி நேரத்தில் சென்னை டூ ஹைதராபாத் செல்ல முடியும்.
இந்தியாவில் இப்போது மும்பை- அகமதாபாத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் பணிகள் நடந்து வருகிறது. சில காரணங்களால் இதன் கட்டுமானம் தாமதம் ஆகியுள்ளது. இருப்பினும், இன்னும் 2027க்குள் இந்த ரூட்டில் புல்லட் ரயில் சேவை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. மும்பை- அகமதாபாத்தைத் தாண்டி வேறு ரூட்களிலும் புல்லட் ரயில்களைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முக்கிய டாக்குமெண்ட்
குறிப்பாகத் தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை ஹைதராபாத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் முன்மொழியப்பட்டது. 778 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த திட்டம், நகரங்களுக்கு இடையேயான பயணத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படும். இத்திட்டம் கிட்டத்தட்ட இறுதியாகவுள்ளது. தெற்கு ரயில்வே இதற்கான இறுதி வழித்தட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும், நிலம் சர்வேக்களை தொடரவும் அனுமதி கோரியுள்ளது.
தமிழக அரசு இதற்கு ஒப்புதல் கொடுத்தால் ஒரே மாதத்தில் இந்த டிபிஆர் இறுதி செய்யப்படும் எனச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ரூட்டில் புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டால் சென்னை- ஹைதராபாத் பயண நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 2.20 மணி நேரமாகக் குறையும். இதில் தமிழகத்தில் 61 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமையும்.
மேஜர் மாற்றம்
முன்பு ஆந்திராவின் குடூர் வழியாக இந்த புல்லட் ரயில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று குடூருக்கு பதிலாகத் திருப்பதி வழியாகச் செல்லும் வகையில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரூட்டில் தமிழகத்தில் இரு ரயில் நிலையங்கள் அமையும். இந்த ரூட்டில் தமிழகத்திற்குச் சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை வெளிவட்டச் சாலையில் உள்ள மீஞ்சூர் அருகே ஒரு புதிய நிலையம் என இரண்டு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
தெற்கு ரயில்வே
இந்த வார தொடக்கத்தில் தான் தெற்கு ரயில்வே மாநில போக்குவரத்துத் துறைக்கு இது தொடர்பாக ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் வழித்தடம் மற்றும் ரயில் நிலையங்கள் எங்கு அமையும் என்பதை விரைந்து இறுதி செய்ய வேண்டும் என்றும் நிலம் கையகப்படுத்துவதற்கான ஒப்புதல் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நில சர்வே பணிகளில் தாமதங்கள் ஏற்படுவதை தவிர்க்க, மாநில அதிகாரிகளுடன் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொள்ள ரயில்வே திட்டமிட்டுள்ளது..
புல்லட் ரயில்
இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு 223.44 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. வனத்துறைக்குச் சொந்தமான இடங்களைத் தவிர்த்துவிட்டுச் செல்லும் வகையிலேயே இந்த புல்லட் ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதிகள் எளிதாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூட் 65 சாலைகளையும், 21 உயர் மின்னழுத்த மின்சார அமைப்புகளையும் கடந்து செல்கிறது.
தென்னிந்தியாவில் மொத்தம் இரு ரூட்களில் புல்லட் ரயில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்று இந்த சென்னை-ஹைதராபாத் வழித்தடம்.. மற்றொன்று ஹைதராபாத்தைப் பெங்களூருவுடன் இணைக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வளரும் பொருளாதார மையங்களை இணைப்பதே இதன் நோக்கம்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications