Chennai: சென்னை டூ ஹைதராபாத்திற்கு மூன்றே மணி நேரம் தான்.. முற்றிலும் புது ரூட்! என்னது புல்லட் ரயிலா? செம
திருப்பதி: நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தி, உலக தரத்திற்கு சீரமைக்கும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை - ஹைதராபாத் (Chennai Hyderabad Bullet Train) மற்றும் பெங்களூரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், வெறும் 2 மணி நேரத்தில் இரு நகரங்களுக்கும் இடையே சென்று வர முடியும்.
இந்தியாவில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேலை நாடுகளுக்கு நிகராக மாற்றம் பெற்று வருகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது போக்குவரத்து உள்கட்டமைப்பு என்பதால், தற்போது சாலை வசதிகள், ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புல்லட் ரயில் சேவை
குறிப்பாக, தற்போது அதிவேகத்தில் இயங்கக் கூடிய புல்லட் ரயில் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால், மும்பையில் இருந்து அகமதாபாத் வரை வெறும் 2 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றுவிட முடியும். மொத்தம் 508 கிலோ மீட்டர் தொலைவை, மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து இந்த ரயில் எட்டும்.
ஹைதராபாத் டூ சென்னைக்கு புல்லட் ரயில்
இது தவிர, மேலும் சில வழித்தடங்களில் புல்லட் ரயில் சேவையை கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஹைதராபாத்திலிருந்து அண்டை மாநிலங்களில் உள்ள பெருநகரங்களுக்கு புல்லட் ரயில் வசதிகளை வழங்கும் பணிகள் வேகமடைந்து வருகின்றன. ஏற்கனவே ஹைதராபாத் - மும்பை அதிவேக பாதையின் விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் நோக்கி, ஆந்திரா வழியாக இரு தனித்தனி அதிவேக புல்லட் ரயில் பாதைகள் அமைப்பது தொடர்பாக இறுதி ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஹைதராபாத் வழியாக சென்னை மற்றும் பெங்களூர் அதிவேக வழித்தடத்திற்கான இறுதி ஆய்வு பணிகளை, ரயில்வேயின் துணை நிறுவனம் ரைட்ஸ் (RITES) முதற்கட்ட சீரமைப்புகளை வகுத்துள்ளது.
அனைத்தும் சாதகமாக இருந்தால்
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழியில், காசிபேட்டை மற்றும் நல்கொண்டா வழியாக மூன்று பாதைகள் இருக்கின்றன. அதுபோல, ஹைதராபாத் - விஜயவாடா இடையே நேஷனல் ஹைவே உள்ளது. இந்த வழித்தடங்களில் புல்லட் ரயில் பாதை அமைப்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. இதில் காசிபேட்டை வழித்தடத்தில் தூரம் அதிகமாக இருப்பதால், என்.எச். ஹைவே அல்லது நல்கொண்டா வழித்தடங்களில் ஒன்றை ஆய்வு செய்து, ஒரு வழியை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்தும் சாதகமாக இருந்தால், இந்த திட்டம் செயல் வடிவம் பெறும்.
2 மணி நேரத்தில் செல்ல முடியும்
ஹைதராபாத் - சென்னை இடையே தற்போது ரயிலில் 12 மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயில் வந்தால், வெறும் 2 மணி நேரத்தில் இரு நகரங்களுக்கும் இடையே சென்று வர முடியும். எனவே, இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், இரு மாநிலங்களுக்கும் பெரும் பலனளிக்கும் வகையில் அமையும்.
அண்மையில் டெல்லி சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்தார். தனது அமைச்சரவை சகாக்களுடன் ரேவந்த் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த போது, புல்லட் ரயில் வழித்தடங்கள் குறித்து விவாதித்தனர்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
தற்போது பணிகள் நடைபெற்று வரும் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2028-29 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஹைதராபாத் - சென்னை மற்றும் ஹைதராபாத் - பெங்களூர் திட்டங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications