AC ரயிலில் ஹேப்பி நியூஸ்.. ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் சென்னைக்கு வந்துட்டே இருக்கு.. ஐசிஎப் அசத்தல்
சென்னை: சென்னை ஐசிஎப்பில் வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வகைகளில் தயாராகி வரும் நிலையில், ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சிறப்பு ரயில் தயாரிக்கப்பட என்ன காரணம்? இதுகுறித்து அதிகாரிகள் சொல்வதென்ன?
உலக அளவிலேயே, ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, சென்னையின் ஐசிஎஃப் விளங்கி கொண்டிருக்கிறது.. இங்கு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் இதுவரை தயாராகி வெளிவந்திருக்கின்றன. அந்தவகையில், பாரத் ரயில்களின் தயாரிப்புகளும் இங்குதான் நடந்து கொண்டிருக்கிறது.

தயாரிப்பு பணிகள்: கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இதுவரை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3515 ரயில் பெட்டிகளை இந்த வருடத்துக்குள் தயாரித்துவிட வேண்டும் என்பதில் ஐசிஎப் முனைப்பு காட்டி வருகிறது. இவைகளில் 658 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும், 1536 எல்எச்பி பெட்டிகளும் இடம்பெற உள்ளது.
வந்தே பாரத் மட்டுமல்லாமல், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள், ஐசிஎப்யில் நடந்து வருகிறது. வந்தே மெட்ரோ ரயில்களும், இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றன... அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்களின் பணிகளும் இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றன. வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவைகளும் இங்குதான் தயாரிக்கப்பட உள்ளன.
படுக்கை வசதி: இப்படிப்பட்ட சூழலில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் இங்குதான் திட்டமிடப்பட்டுள்ளது.. கடந்த ஜூலை மாதம்கூட, சென்னை ஐ சி எப் தொழிற்சாலைக்கு 50 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், 50 வந்தே மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படுக்கை வசதியுள்ள, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முடிந்துள்ளதால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு கொண்டு வந்து, விரைவில் பல கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஸ்லீப்பர் கோச்: இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் தயாரிப்பதற்கு காரணமே, மொத்தமுள்ள 55 வழித்தடங்களில், 110 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், சேர் கார், எக்சிகியூடிவ் சேர் கார் என்று அமரும் வசதியிலான 2 வகை இருக்கைகள் மட்டுமே உள்ளன... இவைகள் நீண்ட நேர பயணத்திற்கு ஏற்றவாறு மிருதுவாக இல்லை என்றும் மிகவும் கடினமாக இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
அதனால்தான், படுக்கை வசதியுடன் கூடிய, சிலீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த வருடம் ஆரம்பமாகின.. இந்த பணிகள் முடிந்துவிட்டதால், இந்த பெட்டிகளை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தார்.
ஆய்வுகள்: இந்த ரயில்தான், விரைவில் சென்னை ஐசிஎப்-க்கு கொண்டு வரப்பட்டு, இங்குள்ள ரயில் பாதையில் இயக்கி, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாம். இதற்கு பிறகே வேகமாக சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
இந்த ரயிலின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப திறன், பயணியர் வசதிகள் குறித்து, வல்லுனர்கள் குழு ஆய்வு நடத்தி, சோதனை அறிக்கையை, ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் வழங்கும் என்றும் அவரது ஒப்புதல் பெற்ற பின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications