சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக இந்து மக்கள் கட்சியின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது... சென்னையில் கடந்த மார்ச் 15ம் தேதி நடைபெற்ற முக்கிய மாநாட்டை கூட்டணி கட்சித் தலைவர்கள் புறக்கணித்துவிட்டார்களாம்.. இதுதான் தற்போது சலசலப்பை தந்துள்ளது.
சென்னை பூரண சந்திரன் திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது.

பாஜக நயினார் நாகேந்திரன்
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை அக்கட்சியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஆனாலும் மாநாடு தொடங்கியபோது முக்கிய தலைவர்கள் யாரும் அங்கு வருகை தரவில்லை என தெரிகிறது.. தங்களை ஆதரிக்கும் ஒரு அமைப்பின் மாநாட்டிற்குத் தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த தொண்டர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது..
குறிப்பாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய புறக்கணிப்பு அடிமட்டத் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புறக்கணிப்புக்கு என்ன காரணம்?
மாநாட்டை தவிர்த்த தலைவர்கள், அதே நேரத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்றதுதான் இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்து அமைப்புகள் ஒருங்கிணைத்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை விட, இப்தார் விருந்துக்கு தலைவர்கள் முன்னுரிமை கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை குறிவைத்தே தலைவர்கள் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் விமர்சகர்களும் சோஷியல் மீடியாவில் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்து மக்கள் கட்சி
இப்படிப்பட்ட சூழலில், இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை பூரண சந்திரன் திடலில் நேற்று முன்தினம் (மார்ச் 15) மாநாடு நடைபெற்றது. இதில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வதாக கூறியிருந்தனர்.
ஆனால் இந்த மாநாட்டில் அவர்கள் யாரும் பங்கேற்காமல், அதிமுக நடத்திய ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்றது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
திமுக - இஸ்லாமியர்கள் ஓட்டுக்கள்
ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் ஓட்டுக்களும் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது. கடந்த காலங்களில் அதிமுக இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்தும் பெருவாரியான இஸ்லாமிய ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கு கிடைத்தது. தமிழகம் முழுக்க இந்து ஓட்டு வங்கியை உருவாக்கி அதிமுக, பாஜ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக நடத்திய மாநாட்டில் இவர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது, இமக தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது. ரம்ஜான் நோன்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் இஸ்லாமிய ஓட்டு வங்கியை கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தை தேஜ கூட்டணி தலைவர்கள் கைவிட வேண்டும். இந்து சமய அமைப்புகளையும் அரவணைத்து செல்லும்படி வேண்டுகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த அறிக்கை பரபரப்பை தந்து வருவதுடன் தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஒருவித தர்மசங்கடத்தை உருவாக்கி உள்ளதாம்...!!!
-
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications