சிசிடிவி வீடியோ.. கலங்கடித்த கடிதம்.. "கிரவுண்டில்" கிடந்த உடல்.. சென்னை ஐஐடி மரணத்தின் திக் பின்னணி
சென்னை: சென்னை ஐஐடியில் நேற்று எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை ஐஐடியில் ஜாதி பாகுபாடு காட்டுவதும், மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் மோசமாக நடத்தப்படுவதும் காலங்காலமாக நடக்கும். ஐஐடி சென்னை குறித்து பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட பின்பும் கூட இதில் ஒன்றிய அரசு இது வரை பெரிய அளவில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து மாணவர்கள் ஜாதி ரீதியான தாக்குதல்களுக்கும் கொடுமைகளுக்கும் இங்கு ஆளாக்கப்பட்டுதான் வருகிறார்கள்.

சடலம்
இந்த நிலையில்தான் சென்னை ஐஐடியில் நேற்று எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுக்க மொத்தமாக எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பின், கோட்டூர்புரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

விசாரணை
அதன்படி ஐஐடி வளாகத்தில் இருந்து ஹாக்கி மைதானத்தில் இந்த உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் இது 22 வயது நிரம்பிய உன்னிகிருஷ்ணன் நாயர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கேரளாவை சேர்த்தவர். சென்னை ஐஐடியில் இவர் பிராஜெக்ட் அசோசியெட்டாக இருந்து வந்தார்.

மரணம்
இவர் பிராஜெக்ட் அசோசியெட்டாக பணியாற்றிய நிலையில் தொடர்ந்து பல்வேறு புறக்கணிப்புகளுக்கும், அழுத்தங்களுக்கும் ஆளானதாக கூறப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஐஐடி நிர்வாகிகள் மூலம் கடும் அழுத்தத்திற்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உன்னிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்கிறார்கள்.

தற்கொலை
இவரின் உடல் ஹாக்கி மைதானத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இவர் எப்போது உடலுக்கு தீ வைத்துக்கொண்டிருப்பார். இதை யாரும் கவனிக்காமல் போனது எப்படி, அல்லது இது திட்டமிட்ட கொலையா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உன்னிகிருஷ்ணன் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

அழுத்தம்
மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டதாக இவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறாராம். ஆனாலும் இந்த மரணம் சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதால் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உன்னிகிருஷ்ணன் காலையில் சென்னை ஐஐடி வந்தது சிசிடிவி வீடியோக்களில் சிக்கி இருக்கின்றன. ஆனால் அதன்பின் எங்கே சென்றார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குழப்பம்
கடைசியாக ஹாக்கி மைதானம் அருகே இவர் சென்றதற்கான வீடியோ உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வீடியோ கிடைத்தால் உன்னிகிருஷ்ணன் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரிந்துவிடும். சென்னை ஐஐடியில் உன்னிகிருஷ்ணன் இறந்தது நாட்டையே உலுக்கி உள்ளதால் போலீசார் இதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications