சென்னையே திணறுது.. மெட்ராஸ் ஐஐடி லேடீஸ் ஹாஸ்டல்.. பாத்ரூமில் யாரு பாருங்க.. தெறித்து ஓடிய பெண்கள்
சென்னை: நாளுக்கு நாள் சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும்நிலையில், பாலியல் தொல்லையும் தலைதூக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.
நம் நாட்டில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலேயே, மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) தலைசிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படித்து வெளியேறி வருகிறார்கள்.. சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது ஐஐடி.

அதேசமயம், சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நடப்பதாக, அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.. காரணம், முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஐஐடி வளாகம்: சென்னை கிண்டி ஐஐடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தனியாக ஐஐடி வளாகத்திலேயே விடுதிகள் உள்ளது.
ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் ஹாஸ்டலில், மர்ம நபர் ஒருவர் புர்கா அணிந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், குளிக்கும்போது அதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து வருவதாகவும் மாணவிகள் ஐஐடி நிர்வாகத்திடம் புகார் தந்தார்கள்.
இதையடுத்து, அந்த லேடீஸ் ஹாஸ்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஐஐடி தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்தனர்.
ஹாஸ்டல்: அப்போது, கடந்த 17ம் தேதி 5 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது உறுதியானது.. யாரோ ஒருவர், புர்கா அணிந்துகொண்டு, அந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்வது பதிவாகியிருந்தது... லேடீஸ் ஹாஸ்டலுக்கும், முகம் தெரியாமல் பர்தாவுடன் சென்றதால், அந்த நபர் மீது அதிகாரி பிரகாஷூக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால், அந்த நபர் யார்? என்று அடுத்தக்கட்ட அதிரடியில் இறங்கினார்.
இதற்காக, பாதுகாப்பு குழுவினரை சேர்ந்த சில பெண்களை, அந்த லேடீஸ் ஹாஸ்டலுக்குள் அனுப்பினார்.. அந்த டீமை உள்ளே அனுப்பிவிட்டு, சிசிடிவியில் அந்த காட்சிகளை பிரகாஷ் கண்காணிக்க துவங்கினார்
பெண்கள் டீம்: அப்போது, அந்த மர்ம நபர், புர்காவுடனேயே, மாணவிகளின் பாத்ரூம் பகுதிக்கு செல்வதை அதிகாரிகள் கேமராவில் கண்காணித்தனர்.. பிறகு, அந்த மர்ம நபர், ஹாஸ்டலின் 5வது மாடியில் உள்ள ரூமுக்குள் நுழைந்து, மாணவிகள் யாராவது அங்கே இருக்கிறார்களா என்று நோட்டமிடுவதும் தெரிந்தது.. இதை கவனித்த பெண்கள் டீம், அந்த நபரை சுற்றி வளைக்க பிடிக்க முயல்வதற்குள், அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவட்டார்.
பிறகு, பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபர் யார் என்ற விவரங்களை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அந்த நபர் பெயர் ஷேர்நாத் ரோகன் லால்.. 26 வயதாகிறது.. உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்தவராம்.. இதே சென்னை ஐஐடியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்.. இதே ஐஐடியில் தங்கி படித்து வரும் ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். அந்த காதலி, இந்த லேடீஸ் ஹாஸ்டலில்தான் தங்கியுள்ளார்..
ஹாஸ்டல்: ஒருமுறை, இந்த ஹாஸ்டலில் அத்துமீறி நுழைந்து, தன்னுடைய காதலியுடன் தகராறு செய்திருக்கிறார்.. இன்னொருமுறை, மாணவியின் பெட்ரூமில் பதுங்கி இருந்துள்ளார்.. இப்படி அடுத்தடுத்த புகார்கள் இந்த மாணவன் மீது வந்ததால், ஐஐடி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்துவிட்டது. வழக்கு விசாரணையும் நடந்து, ரோகன் லாலை கைது செய்து கோர்ட்டிலும் ஆஜர்படுத்தினர்..
அப்போது மாணவன் தரப்பு ஆஜரான வழக்கறிஞர் ரோகின் லால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி, அதற்கான ஆவணங்களையிம் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.. இதை பார்த்த நீதிபதியும் ரோகின் லாலுக்கு ஜாமீன் தந்துவிட்டார்.
ஜாமீனில் வெளியே வந்துகூட, ரோகின் லால் திருந்தவேயில்லையாம்.. மறுபடியும் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து அத்துமீறியிருக்கிறார்.. நாளுக்கு நாள் ரோகின் லால், ஒரு சைக்கோபோல செயல்பட துவங்கிவிட்டாராம். அப்படித்தான், கடந்த 17ம் தேதியும் அதே லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்துள்ளார்,.. பின்பக்க கேட்டை உடைத்து, புர்கா அணிந்து கொண்டு உள்ளே வந்துள்ளார்.. பெண்களின் பாத்ரூம் பகுதிக்குள் சென்று, அவர்கள் குளிப்பதை வீடியோவும் எடுத்து வந்துள்ளார்..
அதிரடி கைது: பெட்ரூமுக்குள் நுழைந்து, பதுங்கியிருந்து, அங்கேயும் மாணவிகளை வீடியோ எடுத்து வந்துள்ளார். இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது செல்போனை போலீசார் வாங்கி பார்த்தபோது, மாணவிகளின் குளியல் வீடியோக்கள் ஏராளமாக இருந்ததாம்.. இதையடுத்து, ரோகின் லாலை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
அறிக்கை தாக்கல்: சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத்தும் 250-300 பக்க அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு ஐஐடியிடம் சமீபத்தில் சமர்த்திருந்தது..
ஐஐடியில் முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 250 முதல் 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐஐடி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்ட நிலையில், இப்போது பாலியல் புகார் கிளம்பி உள்ளது பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications