சென்னைக்கு "தலையே" சுத்திடுச்சு.. ஏர்போர்ட் வாசல்ல பார்த்தீங்களா.. அதுவும் குவியல் குவியலாக.. ஓ காட்
சென்னை: சென்னை ஏர்போர்ட் வாசலிலேயே ஆதார் கார்டுகளும், பான் கார்டுகள் ஏராளமாக கொட்டிக்கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. யார் இந்த காரியத்தை செய்தது?
சென்னை ஏர்போர்ட் பகுதியில் A6 எனப்படும் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த இடத்தில் ஏராளமான ஆதார்கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் கீழே குவியல் போல விசிறியெறியப்பட்டிருந்தன. இதை பார்த்ததும், அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியானார்கள்.

அடையாள அட்டைகள்: இந்த அடையாள அட்டைகளெல்லாம் யாருடையது என்று தெரியவில்லை.. வழக்கமாக, ஏர்போர்ட்டுக்கு வரும் பயணிகள் தங்களது டிக்கெட்டுடன் சேர்த்து, ஒரு அடையாள அட்டையை கொண்டு சென்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் காட்டிவிட்டு, அதற்கு பிறகு பயணம் செய்வது வழக்கம்... அந்தவகையில், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் பயணிகளை ஏர்போர்ட்டுக்கு கொண்டு வருவார்கள்..
எனினும் ஃப்ளைட் ஏறும் அவசரத்தில், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகளை பயணிகள் சில சமயங்களில் தவறிவிட்டுவிடுவார்கள்.. அப்படி தவறவிடும் அடையாள அட்டைகளை ஏர்போர்ட் அதிகாரிகளும் முறையான முறையில் ஒப்படைப்பதில்லை என்கிறார்கள்.
தபால்துறை: அப்படியே நேரடியாக ஒப்படைக்க முடியாமல் போனாலும், இப்படி தவறவிடும் ஆதார் அட்டை, பான் கார்டுகளை தபால் துறை மூலமாக அவர்கள் போஸ்ட் செய்தால் போதும், அது உரியவரிடம் சென்று அதற்கான தொகையை அவர்களிடமே பெறுவது, இந்திய தபால் துறை சட்டத்தில் உள்ளது.
ஆனால் விமான நிலையத்தை சேர்ந்த தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகளும், ஏர்போர்ட் அதிகாரிகளும், பயணிகள் தவறவிட்ட ஆதார் கார்டுகள், பான் கார்டுகளை திருப்பி அவர்களுக்கு அனுப்பாமல், அங்கேயே குப்பையை போல கொட்டி வைத்திருக்கிறார்கள்.. இதை பார்த்துதான், பயணிகள் அடைந்துள்ளனர்..
குப்பைத்தொட்டி: அதனால், அந்த கார்டுகளை எல்லாம், உரியவர்களிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்து, குப்பையில் கிடந்த ஆதார் அட்டை, பான் கார்டுகளை எடுக்க முயன்றுள்ளனர்... ஆனால், அங்கிருந்த தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவர்களை தடுத்து எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்.
இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து, அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. பிறகு, இது குறித்து விமானத்துறை அதிகாரியிடம் பயணிகள் கேட்டுள்ளனர்.. அதற்கு, தவறவிட்ட அடையாள அட்டைகளை நாங்கள் முறையாக அனுப்புவது வழக்கம்.. ஆனால் கொஞ்ச காலமாகவே அனுப்பவில்லை.. நீண்டகாலமாகவே யாருமே வந்து வாங்காததால், இப்படி கீழே கொட்டப்படுகிறது.. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று, பயணிகளுக்கு சமாதானம் சொல்லி உள்ளார்கள்.
முறைகேடுகள்: எனினும், பயணிகளுக்கு அதிகாரிகளின் இந்த வார்த்தை சமாதானம் தரவில்லை.. காரணம், ஆதார் கார்டுகளை வைத்து புதிய சிம்க்கார்டுகளை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும்.. ஒருவேளை, இந்த கார்டுகள் தவறான நபருக்கு கிடைத்தால் நிறைய குற்ற செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பாகிவிடும் என்று கவலையோடு சொல்கிறார்கள்.
இதனிடையே, குப்பை போல, அடையாள அட்டைகளை கொட்டுவது, இதுதான் முறையா? இதற்கு முன்பும் வீசப்பட்டுள்ளதா? என்று காவல்துறையும், விமானத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications