Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையே ஆடிப்போச்சு.. நிஜமாவே "இடியாப்ப" சிக்கல்.. 2வதாக வாக்கப்பட்ட உறவு.. கோர்ட்டுக்கு ஒரே ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்பப்பட்டு வந்த வனிதாவுக்கு, நீதிமன்றம் உரிய நீதியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.. யார் இந்த வனிதா?
சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை பிரிந்துவிட்டார்.. எனவே, வனிதா என்பவரை 2வது கல்யாணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் இவர் 2வது கணவர் ஆவார்.

தகராறுகள்: 2 பேருக்குமே இது 2வது கல்யாணம்.. ஆனாலும், கணவன், மனைவி இடையே தினமும் தகராறு வெடித்துள்ளது.. இதற்கு முக்கிய காரணம், வேணுகுமார் தண்ணி அடிப்பவராம்.. மதுபோதைக்கு அடிமையாகிவிடவும், தினமும் இதைவைத்தே குடும்பத்தில் தகராறு வெடித்துள்ளது.

Chennai Incident and rs20 lakhs compensation to the wife, madras High court order

ஒருநாள் வனிதாவிடம், இடியாப்பம் செய்து தரும்படி வேணுகுமார் கேட்டாராம்.. அதற்கு வனிதா, வீட்டில் இடியாப்ப குழல் இல்லை.. குழல் இருந்தால்தான், இடியாப்பம் செய்ய முடியும் என்று சொன்னாராம்.. இடியாப்பம் கேட்டு, உடனே செய்து தராததால், வனிதா மீது கடும் ஆத்திரம் அடைந்த வேணுகுமார், அவரை சரமரியாக அடித்து நொறுக்கி உள்ளார். அதுவரை பொறுத்து பொறுத்து பார்த்த வனிதா, இடியாப்பம் இல்லை என்பதற்காக மனசாட்சியே இல்லாமல் கணவர் அடித்துவிட்டதால், போலீசுக்கு போனார்.

கண்ணீர் வனிதா: இதுதொடர்பான வழக்கு வழக்சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்தது.. ஒவ்வொரு முறை வழக்கு விசாரணையின்போதும், கணவனால் தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் கோர்ட்டில் கண்ணீர் விட்டு சொன்னார் வனிதா.

"தினம் தினம் குடிகார கணவனால் நான் சித்ரவதை அனுபவித்தேன்.. எங்களை சேர்த்து வைக்க குடும்பத்தில் பலர் சமரச முயற்சி மேற்கொண்ட நிலையில் அதுவும் பலனளிக்கவில்லை.. இப்படித்தான், கடந்த 2018-ல் என் கணவரின் பிறந்தநாளுக்காக, ஆசை ஆசையாய் காப்பி கப் பரிசாக வாங்கி தந்தேன்.

பர்த்டே கிப்ட்: ஆனால், அந்த காபி கப்பை, ஆஷ் ட்ரே போல (சிகரெட் சாம்பல் கொட்டுவதற்காக) பயன்படுத்தி கொண்டார். நான் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால், என் மாமியார் குடும்பத்தினர், கல்யாணத்துக்கு அப்பறம், வேலைக்கு போகக்கூடாது என்று சொன்னதால், வேலையை விட்டுவிட்டேன். தினமும் வீட்டு செலவுக்குகூட என் கணவர் பணம் தருவதில்லை, அதனால், என் அப்பாவிடமிருந்துதான் செலவுக்கு பணம் வாங்கி வந்தேன" என்றெல்லாம் லிஸ்ட் போட்டு, குற்றச்சாட்டுகளை சொன்னார் வனிதா.

இதைக்கேட்டதும் வேணுகுமார், வனிதா மீது லிஸ்ட் போட்டு குறை சொல்ல துவங்கினார். "வனிதா சொல்வது எல்லாமே பொய்... நான் வீட்டுக்கு வந்தால், எனக்கு சாப்பாடு செய்து தருவது கிடையாது. வீட்டில் ஒழுங்காக சமைப்பதும் கிடையாது.. அதனால், அடிக்கடி வெளியே ஓட்டலில்தான் சாப்பிட்டேன்.. ஏதாவது கேட்டால், உடனே தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார்..

கவுன்சிலிங்: ஒருவேளை, மனைவிக்கு ஏதோ மனரீதியாக பிரச்சனை என்று நினைத்தேன். அதனால், நிபுணர்களின் கவுன்சிலிங்குக்காக பலமுறை அழைத்தேன்.. ஆனால், வனிதா மறுத்து விட்டார். இவ்வளவு அபாண்டங்களையும் என்மீது சொல்ல காரணம், என்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காகத்தான்" என்று புகாராக அடுக்கினார்.

இப்படி இரு தரப்பிலுமே குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் அடுக்கப்பட்டன. இந்த வழக்கை நீதிபதி அனிதா ஆனந்த் விசாரித்தார்.. அப்போது, இந்த வழக்கு விசாரணையின்போது, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதற்காக கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் நடவடிக்கையை வேணுகுமார் எதிர்கொண்டது தொடர்பான ஆவணம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி அனிதா ஆனந்த், "கேஸ் நடத்துவதற்கே எதிர்மனுதாரரான வேணுகோபால் கடன்வாங்கியிருக்கிறார்.. இப்படி எதுவுமே அவரிடம் இல்லாத நிலையில், மனுதாரர் வனிதா சொத்துக்களை எப்படி அவரிடமிருந்து அபகரிக்க முடியும்?

இழப்பீடு: எதிர்மனுதாரர் தன்னுடைய பொருளாதார நிலைமையை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து உணர்வு ரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியது தெளிவாகிறது. எனவே, வனிதாவுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, இப்போது இந்த தம்பதி, விவாகரத்து வேண்டும் என்று கேட்டு, குடும்ப நல கோர்ட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்களாம்.

இத்துனூண்டு இடியாப்பத்தில் ஆரம்பித்த பிரச்சனை, இப்போது, 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் தாண்டி, வாழ்க்கையையே சுருட்டி போட்டுவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+