பிறந்த நாள் பார்ட்டி.. அம்மாவிடம் பொய் சொன்ன இளம் பெண்.. பல்லாவரத்தில் ஆண் நண்பரால் நடந்த கொடுமை
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 20 வயது பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி இளைஞர், அத்துமீறியதுடன், அந்த பெண்ணை பல்லாவரத்தில் அறையில் அடைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். அம்மாவின் தோழியின் பிறந்தநாளுக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு சென்ற பெண்ணுக்கு என்ன நடந்தது.. யார் அவர்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாதவர்களிடம் பெண் குழந்தைகள் பழகுவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது இன்றைக்கு கட்டாயம் ஆகும். சில பெண் குழந்தைகள், இன்ஸ்டாவில் ஷாட்டிங் செய்யும் நட்பாக பழகுகிறார்கள்.. அப்படி பழகும் பெண்களை குறிவைத்து ஏமாற்றுவதை சில 2கே கிட்ஸ் இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

காதல் என்ற பெயரிலும், நட்பு என்ற பெயரிலும் வலைவிரிக்கும் சில 2கே கிட்ஸ்களின் வலையில் விழும் டீன் ஏஜ் குழந்தைகள், கடைசியில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சிலர் அவர்களின் ஆசை பேச்சுக்களுக்கு வீட்டை ஓடிச்சென்று திருமணம் செய்வதும் நடக்கிறது. சிலர் பிறந்த நாள் பார்டி என்று பொய் சொல்லி ஊர் சுற்றுவதும், டேட்டிங் செல்வதும் நடக்கிறது. அப்படி வந்த பெண்ணுக்கு நடந்ததை பற்றி பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல்லாவரத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞருடன் நெருங்கி பழகி உள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக ஹரிஷ் வெளியில் அழைத்துள்ளார். அவரை பார்க்கும் ஆசையில் அந்த பெண் கடந்த 26-ந் தேதி வெளியில் செல்ல முடிவு செய்தார். தனது அம்மாவிடம், தோழியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு செங்கல்பட்டு சென்றுள்ளார். அங்கு ஹரிஷ் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு, பல்லாவரத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். இருவரும் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்கள்..

பின்னர் ஹரிஷ், தனது நண்பர்கள் இருவரை வரவைத்து, மூன்று பேரும் சேர்ந்து, அப்பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களாம்.வலி தாங்க முடியாமல் தவித்த அப்பெண், நேற்று முன்தினம் இரவு, சிட்லப்பாக்கம், சங்கர் நகர் ஆகிய இடங்களில் இருந்து தனது சகோதரருக்கு, மாறி மாறி செல்போனில் குறுஞ்செய்தி மற்றும் இருப்பிடம் தொடர்பான லொக்கேஷனை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து, அவரது சகோதரர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
பல்லாவரம் மகளிர் போலீசார், சங்கர் நகர் அருகே அப்பெண்ணை மீட்டனர். அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அப்பெண்ணை அழைத்து வந்த ஹரிஷ் எந்த பகுதியை சேர்ந்தவர், எந்த இடத்தில் தங்கினர், ஹரிஷின் நண்பர்கள் யார் உள்ளிட்ட எந்த விவரமும் போலீசுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக, அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுத்தால் மட்டுமே நடந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும் என்று காவலர்கள் தெரிவித்தனர். எனினும் திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தில், அப்பெண் மாயமானதாக புகார் பதிவாகியுள்ளது. அந்த வழக்கை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். 3 பேரை கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்,












Click it and Unblock the Notifications