தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) அமலுக்கு வந்தாலே, அரசு இயந்திரம் அப்படியே 'ஸ்தம்பித்து' விடும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
அரசியல் கட்சிகள் சீட் கணக்கிலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் பிஸியாக இருக்க, மாநகராட்சி அதிகாரிகளோ 'டெண்டர்' கணக்கில் வேகம் காட்டி வருகின்றனர்.

கடைசி நேர 'மின்னல்' வேகம்!
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சரியாக 20 நிமிடங்களுக்கு முன்பு வரை சென்னை மாநகராட்சியில் அனல் பறந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுமார் 180 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஞாயிறு மதியம் 3:40 மணிக்கு - அதாவது விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு வெறும் 20 நிமிடம் முன்னதாக - 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டன.
"எல்லாம் சிறிய வேலைகள்தான், முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களைக் கொண்டு இவை முடிக்கப்படும்" என அதிகாரிகள் கூலாகச் சொன்னாலும், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமையே டெண்டர் விடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
எம்.எல்.ஏ-க்களின் 'நிதி' வேட்டை
தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதி வீணாகிவிடக்கூடாது என்பதில் எம்.எல்.ஏ-க்கள் காட்டிய ஆர்வம் ஆச்சரியப்பட வைத்தது:
அண்ணா நகர்: எம்.எல்.ஏ எம்.கே. மோகன் நிதியில் ஜிம் உபகரணங்கள் மற்றும் ஷட்டில் கோர்ட் அமைக்க 12.4 லட்சம்.
வேளச்சேரி: திருவான்மியூர் முதல் அடையாறு வரை பேருந்து நிறுத்தங்களைச் சீரமைக்க 11 லட்சம்.
செங்கல்பட்டு: "நாளைக்கு விதிமுறை வந்திடுமே" என்ற பதற்றத்தில், சனிக்கிழமை அதிகாலையிலேயே கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பேருந்து நிறுத்தத்தைத் திறந்து வைத்தார் எம்.எல்.ஏ வரலட்சுமி.
மாதவரம்: ரெட்டேரி ஏரி புனரமைப்புப் பணிகளை அவசர அவசரமாகத் திறந்து வைத்தார் எம்.எல்.ஏ சுதர்சனம்.
தடை இல்லா 'மெகா' புராஜெக்ட்கள்
சென்னை மாநகராட்சி இது தொடர்பாக கூறுகையில், "பெரிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அண்ணா சாலை மேம்பாலம், ஏபிசி மையங்கள், கூவம் குறுக்கே பாடி ஆற்றுப் பாலம், விருகம்பாக்கம் கால்வாய் பாலங்கள் என எதுவும் நிற்காது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடியும் பணிகளை ஆரவாரம் இல்லாமல், மக்கள் பயன்பாட்டிற்கு அப்படியே திறந்து விடுவோம். விழாக்கள் மட்டும் கிடையாது," எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தேதி அறிவிக்கப்பட்ட அந்த நொடியில் இருந்தே தமிழகத்தில் 'தேர்தல் நடத்தை விதிமுறைகள்' (Model Code of Conduct - MCC) அமலுக்கு வரும். 'அப்படினா என்ன? இனி என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?' - ஒரு குயிக் லுக்!
1. நடத்தை விதிகள் என்றால் என்ன?
தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதையும், ஆளும் கட்சிகள் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளே இந்த MCC. இது இன்று மாலை தொடங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
2. ஆளும் கட்சி மற்றும் அமைச்சர்களுக்குப் பூட்டு!
புதிய திட்டங்கள் கிடையாது: இன்று மாலைக்கு மேல் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டு விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என எதுவுமே இனி 'நோ நோ' தான்.
அரசு இயந்திரம்: அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது.
விளம்பரங்கள்: அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.
3. அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டியவை:
விமர்சனங்கள்: எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றி விமர்சிப்பது விதிகளுக்கு எதிரானது.
மத உணர்வுகள்: ஜாதி, மதம் அல்லது மொழி உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதோ கடும் நடவடிக்கைக்கும், தகுதி நீக்கத்திற்கும் வழிவகுக்கும்.
அனுமதி கட்டாயம்: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அந்தந்தப் பகுதி காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
4. பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
பணப் புழக்கம்: 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
புகார் அளிக்க 'C-Vigil': உங்கள் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலோ அல்லது விதிமீறல்கள் நடந்தாலோ 'cVIGIL' ஆப் மூலம் நேரடியாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் புகார் அளிக்கலாம். 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications