தென்னிந்தியாவிலேயே முதல்முறை.. மிரட்ட வரும் அசுரன்.. சென்னை போக்குவரத்து போலீஸ் செய்யும் மேஜிக்!
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை சேர்த்துள்ளது.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக வடசென்னையில் இப்படி ஒரு வாகனத்தை சென்னை மாநகர போலீசார் அறிமுகம் செய்துள்ளார்கள்.

சென்னை மாநகரில் போக்குவரத்து போலீசார் விபத்துக்களையும் தடுக்கவும், உயிரிழப்புகளையும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள். விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் படம் பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். இதேபோல் சென்னைவாசிகளின் ட்விட்டர் பதிவுகள் வாயிலாகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இதேபோல் சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் டிராஸ் என்ற கேமரா வைக்கப்பட்டு அது எடுத்து அனுப்பும் புகைப்படம் மூலமும் அபராதத்தை போலீசார் விதிக்கிறார்கள். மேலும், ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் டிராஸ் கேமரா பொருத்த போகிறார்கள்.
இதேபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள். ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்துபயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிறுத்த குறியீட்டைதாண்டி சாலையில் வாகனத்துடன் நிற்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனத்தில் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்கள், வாகனத்தை வைத்து ரேஸில் ஈடுபடுபவர்கள் உள்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சென்னை முழுவதும் ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) எனப்படும் அதிநவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்களை துல்லியமாக படம்பிடித்து அதை போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிமீறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கே போலீஸார் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் அபராத செலானையும் இணைத்து அனுப்பி விடுவார்கள்.
இப்படி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தால் சென்னையில் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன. சென்னை போலீசார் வெறும் கேமராக்களை வைத்து மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் யார் புகார் கூறினாலும் அதை ஆராய்ந்து, சிசிடிவி கேமராக்களை பார்த்து நடவடிக்கை எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிடுகிறார்கள். அதனை பார்த்து பலரும் விதிமீறல்களை புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள். இதன் காரணமாக விதிமீறலில் ஈடுபடுவதும் கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை சேர்த்துள்ளது. தென்னிந்தியாவிலேய முதல்முறையாக வடசென்னையில் இந்த வாகனம் நிறுவப்பட உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications