சென்னையே உடைகிறதா.. காஞ்சிபுரம் பிரிகிறதா.. என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அறிவாலயத்தில் ஒரே பரபரப்பு
சென்னை: திமுகவில் மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.. இதையடுத்து, தமிழக மாவட்டங்களில் ஒருவித டென்ஷன் எகிறி காணப்படுகிறது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் இதற்காக மும்முரமாகி வருகின்றன.. அந்தவகையில், திமுகவும் களத்தில் குதித்துள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டமும், மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் திருச்சி + ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.. எனினும், சில மாவட்டங்களில், அதிருப்திகளும், உட்கட்சி பூசலும், கோஷ்டி விவகாரங்களும் தலைதூக்கி உள்ளதால், சில நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படாமலும் இருந்தனர்.
இது குறித்தெல்லாம் முதல்வரிடம், புகார்கள் தொடர்ந்து சென்றுகொண்டேயிருந்ததையடுத்து, எந்தெந்த மாவட்டங்களில் பூசல்கள் எல்லாம் தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் அவைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.. அதுமட்டுமல்ல, பிரச்சினை உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, தலைமை கழக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
தென்காசி: தென்காசியிலும் இப்படியான உட்கட்சி பிரச்சனை வெடித்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அறிவாலயம் தரப்பில் உரிய அறிவுரை தந்து அனுப்பியதாக தெரிகிறது. எனினும், சில மாவட்டங்களில் தீர்க்க முடியாத பூசலும் நிலவி வருவதால், முக்கிய அதிரடிகளை திமுக கையிலெடுப்பதாக தெரிகிறது.
குறிப்பாக, திமுகவில் தற்போது 2 சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் சில இடங்களில் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், சில மாவட்டங்களில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர், 5 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கிறார்கள். எனவே, இதை பிரிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
ஆலங்குளம், தென்காசி: உதாரணத்துக்கு, நெல்லை கிழக்கு மாவட்டத்தில், ராதாபுரம், நாங்குனேரி அம்பை தொகுதிகளும், தென்காசி தெற்கு மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளும் உள்ளன.. இங்கெல்லாம் கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ஒரு புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க மேலிடம் ஆலோசனை நடத்தி உள்ளதாம்..
அதேபோல் சென்னையிலும், அம்பத்தூர், மதுரவாயல் தொகுதியை உள்ளடக்கி ஒரு புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
72 மாவட்டங்கள்: திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், இங்கு மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் பொறுப்பில் உள்ளனர். இதில் ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் மட்டும், 2 சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க திமுக மேலிடம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
2 வருடத்துக்கு முன்பு இப்படி ஒரு பேச்சு எழுந்தது.. அதாவது, 70 வயதுக்கு மேற்பட்ட மா.செ.க்களை மாற்றியமைத்து அந்த மாவட்டங்களில் இளைஞர்களை மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம், உதயநிதி ஏற்கனவே ஒரு கோரிக்கையை வைத்திருந்தாராம்..
மாவட்ட செயலாளர்கள்: அதுபோல, "சீனியர் மாவட்ட செயலாளர்கள் பலரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.. அமைச்சர் பதவியில் அவர்கள் இருப்பதால் கட்சி பதவியிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்" என்று தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஸ்டாலினிடம் சபரீசனும் யோசனை சொல்லியிருந்தாராம்.
இதுதொடர்பாக நிறைய மாற்றங்கள் மாவட்டங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவுமே பெரிதாக நடக்கவில்லை.. தற்போது எம்பி தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரச்சனைக்குரிய மாவட்டங்களில் மட்டும், திமுக மேலிடம், கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications